கோவை மருத்துவமனையில் திருட முயன்றதாக ஒருவர் கொலை: காவலாளிகள் உள்பட 15 பேர் கைது
09:58 AM May 29, 2024 IST
Share
கோவை: கோவையில் தனியார் மருத்துவமனையில் திருட முயன்றதாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவலாளிகள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த ராஜா என்பவர் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்குள் புகுந்து கம்பிகளை திருட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைக்கு வந்த ராஜாவை காவலாளிகள், மருத்துவமனை நிர்வாகத்தினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.