கோவையில் தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டம்: கிராம மக்களே திரண்டு யானைகளை விரட்டினர்
கோயம்புத்தூர்: கோவை குப்பனூர் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தை கிராம மக்களே ஒன்று கூடி விரட்டினர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக யானைகளை பொறுத்தளவில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான வசிக்கின்றனர். இவை தொண்டாமுத்தூர் பகுதிகளில் அவ்வப்போது வெளியேவந்து வீட்டு விளைநிலங்களுக்கு சென்று தங்களது தேவையான உணவு, நீர் உள்ளிட்ட ஆதாரங்களை எடுத்து செல்லவது கோடைகாலங்களில் வழக்கமாக இருக்கிறது. ஆனால் இதைப்போன்ற காலங்களில் யானைகள் அதிகமாக வரும்.
இந்த நிலையில், நேற்றியை தினம் நள்ளிரவு தொண்டாமுத்தூர் உட்பட்ட குப்பனூர் பகுதிக்குள் சுமார் 6 யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி வந்திருக்கிறது. அப்போது அதை பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் யானைகள் கூட்டம் மெல்ல மெல்ல குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து உள்ளே வரக்கூடிய சூழல் நிலவுகிறது. அதை பார்த்த பொதுமக்கள் வனத்துறை முன்பாகவே தங்களது திட்டர் உள்ளிட்ட வாகனகளை எடுத்து யானைங்களை விரட்டினர். அந்த யானையானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை நோக்கி வேகமாக ஓடி உள்ளே புகுந்து சென்றனர்.
இந்த நிலையில், யானைகள் அந்த பகுதிக்கு வந்த பொழுது வேலுச்சாமி என்பவர் தோட்டத்தில் இருந்த வெளிகளையும், தண்ணீர் பாச்சக்கூடிய உபகரணகள், தென்னை உள்ளிட்ட மரங்களை சேதம் படுத்தியுள்ளது. இதற்கு உண்டான இழப்பீடு வழங்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் இருந்து இதைப்போன்ற காலகட்டங்களில் யானைகள் கூட்டக்கூட்டமாக வெளியே வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறை பொறுத்தவரை கூடுதலாக குழு அமைத்து யானைகளை வராதவாறு நடவடிக்கை எடுக்கவும், வரக்கூடிய யானைகளை விரைந்து விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.