தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை வனக்கோட்டத்தில் 232 காட்டு யானைகள் 15 ஆண்டுகளில் உயிரிழப்பு

கோவை: கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் தற்போது வரையிலான 15 ஆண்டு காலத்தில் 232 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கோவை வனக்கோட்டம் 694 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாய்க்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

Advertisement

குறிப்பாக கோவை வனகோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழைவதும், அதனால் பயிர் சேதங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சில சமயங்களில் காட்டு யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும் நடந்து வருகிறது. இதேபோல இயற்கை மரணம், நாட்டு வெடி, மின்சார தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் காட்டு யானைகள் உயிரிழப்பதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2010 முதல் தற்போது வரையிலான 15 ஆண்டு காலத்தில் 232 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறையினர் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி 202 யானைகள் நோய் மற்றும் வயது முதிர்வு போன்ற இயற்கையான காரணங்களினாலும், 30 யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களினாலும் உயிரிழந்துள்ளன.

அதிகபட்சமாக கடந்த 2023ம் ஆண்டில் 23 யானைகளும், குறைந்தபட்சமாக கடந்த 2024ம் ஆண்டில் 8 யானைகளும் உயிரிழந்துள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 15 யானைகள் பல்வேறு காரணங்களில் உயிரிழந்துள்ளன. இந்தாண்டில் இதுவரை 13 யானைகள் உயிரிழந்துள்ளன. அவற்றில் 10 யானைகள் இயற்கையான காரணங்களால் உயிரிழந்துள்ளன.

Advertisement