Home/செய்திகள்/Coimbatore Accident Free Municipal Corporation Chief Minister M K Stalin
கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ரூ.5 கோடியில் செயல்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
11:38 AM Jun 29, 2024 IST
Share
சென்னை: கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ரூ.5 கோடியில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் 100 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், புதிதாக மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.