கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா உறுதி; அதிமுக தனித்துதான் ஆட்சி எடப்பாடி மீண்டும் சொல்கிறார்
அமித் ஷாவின் கருத்து குறித்து பேட்டியளித்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அமித் ஷாவின் கருத்துதான் எங்களுக்கு வேதவாக்கு என்று கூறி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற கருத்தை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், சேலத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் அதிமுக, பாஜ கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. 2026 தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இதில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தான் ேதர்தல் அறிவிப்பார்கள். அப்போது பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது என்றார். அப்போது அவரிடம், தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா மீண்டும் மீண்டும் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு, ‘‘அதிமுக தனித்துதான் ஆட்சி அமைக்கும். ரைட்’’ என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.