தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை: அன்புமணிக்கு அதிமுக செம்மலை பதில்
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று அன்புமணிக்கு அதிமுக மூத்த தலைவர் செம்மலை பதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை; எதிர்காலத்திலும் வாய்ப்பில்லை. ஆட்சியில் பங்கு என்பது அன்புமணியின் விருப்பம்; விருப்பப்படுவது தவறில்லை. கூட்டணி ஆட்சிக்கு நேர்மாறாகத்தான் தமிழ்நாட்டு மக்கள்
வாக்களிப்பார்கள். கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள் என தெரிவித்தார்.
Advertisement