ஒடுக்கப்பட்ட இனத்தின் மாண்புக்காக இறுதிவரை போராடியவர் தியாகி இமானுவேல் சேகரனார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Advertisement
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு: ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். அவரது நூற்றாண்டையொட்டி கடந்த ஆண்டு முதல் அவரது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இமானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அரசின் மற்றொரு அறிவிப்பும் செயல்வடிவம் பெற்று, இம்மாத இறுதிக்குள் முழுமையடைய தயாராக உள்ளது. எல்லாருக்கும் எல்லாம் எனும் நம் பயணத்தில் சமத்துவத்துக்கான அவரது போராட்டங்கள் தொடர்ந்து வழிகாட்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Advertisement