முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் மனநல சிகிச்சை
04:27 PM Aug 13, 2025 IST
சென்னை: மனநல காப்பகங்களில் சிகிச்சை பெறுவோர், குடும்ப அட்டை மற்றும் வருவாய் சான்றிதழ் இன்றி முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 108 மனநல மையங்களில் உள்ள 5944 பேரை காப்பீடு திட்டத்தில் இணைத்து சிகிச்சை அளிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.