கிளட்ச் செஸ் போட்டி: கார்ல்சன் சாம்பியன்
செயின்ட் லூயிஸ்: கிளட்ச் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. கடைசி நாள் நடந்த 4 போட்டியிலும் கார்ல்சன் வெற்றி பெற்று 25.5 புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். பேபியானோ கரவுனா 16.5 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தையும், ஹிகாரு நகமுரா 14 புள்ளிகளுடன் 3ம் இடத்தையும் பிடித்தார். முதல் நாளில் முதலிடத்தில் இருந்த குகேஷ் 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ.1.05 கோடி பரிசு வழங்கப்பட்டது. குகேஷுக்கு ரூ.62 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
* தமிழ்நாட்டின் 35வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதி
சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இவர், இந்தியாவின் 90வது மற்றும் தமிழ்நாட்டின் 35வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
