கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் கார்ல்சன்-குகேஷ் மோதல்
செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இரு வாரங்களில் துவங்கவுள்ள கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் மோதவுள்ளார்.
Advertisement
18 ரேபிட் செஸ் போட்டிகள் கொண்ட கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் தொடரில் இவர்களை தவிர, ஹிகாரு நகமுரா, பேபியானோ கரவுனா ஆகிய வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு, ரூ.1.05 கோடி பரிசு கிடைக்கும். 2ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.78 லட்சமும், 3ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.62 லட்சமும் பரிசாக கிடைக்கும்.
Advertisement