தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போர் மேகங்கள் கலைந்ததால் ஐபிஎல் போட்டிகள் விரைவில் துவக்கம்: ஒவ்வொரு நாளும் 2 போட்டிகள்

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக ஐபிஎல் போட்டிகளை துவங்குவதற்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாக, ஐபிஎல் தலைவர் அருண் துமல் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த வாரம் இந்தியா - பாக். இடையே திடீரென போர் மேகங்கள் சூழ்ந்ததால் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement

இந்த சூழ்நிலையில், இந்தியா - பாக். இடையே போர் நிறுத்தம் செய்யப்படுவதாக, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஐபிஎல் தலைவர் அருண் துமல் அளித்த பேட்டியில், ‘போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் போட்டிகளை உடனே துவக்குவது குறித்த வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். மீதமுள்ள போட்டிகளை நடத்தும் இடம், தேதி, நேரம் உள்ளிட்டவை குறித்து தக்க முடிவு எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அரசுடனும் கலந்து பேச வேண்டி உள்ளது’ என்றார்.

இதற்கிடையே, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வரும், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், வரும் ஜூன் முதல் தங்கள் நாட்டு அணிகளுக்காக போட்டிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால், இம்மாத இறுதிக்குள் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தென் இந்தியாவில் உள்ள சென்னை, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது என்றும், ஒரு நாளைக்கு இரு போட்டிகள் நடத்த பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வரும் 16ம் தேதி முதல் ஐபிஎல் மீண்டும் துவக்கப்படலாம் என்றும், புதிய அட்டவணை, 11ம் தேதி (நேற்று) இரவுக்குள் வெளியிடப்படலாம் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்ட அறிவிப்பு வெளியான பின்னர், பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் சென்றனர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளில் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement