ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு இடத்தில் மேகவெடிப்பு: உயிரிழப்பு 33ஆக அதிகரிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் 20 நிமிடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, கங்கன் உள்ளிட்ட இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பு ஏற்பட்ட கிஷ்த்வார் மாவட்டத்தில் மீட்புப் பணியில் பேரிடர் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 45 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிஷ்த்வாரில் மேகவெடிப்பால் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்த நிலையில் பஹல்காமிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலில் சிம்லா, கொத்தகை உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராம்பூரில் மேகவெடிப்பால் பெய்த கனழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கொத்தகையில் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.