மேகவெடிப்பால் மதுரையில் நேற்று 13 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததாக வானிலை மையம் தகவல்
மதுரை: மதுரையில் நேற்று மாலை திடீர் என கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 4 மணிஅளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒன்றறை மணி நேரத்துக்கு மேலாக கடுமையான கனமழை பெய்தது. மதுரை நகர் பகுதியில் குறிப்பாக மதுரை தல்லாகுளம் இருக்கக்கூடிய பகுதியில் தான் அதிக அளவில் கனமழை பொழிந்தது.
குறிப்பாக சமீப காலமாக மேக வெடிப்பு ஏற்பட்டு அதிக மழை ஒரே இடத்தில் பெய்ய கூடிய நிகழ்வு இந்தியா முழுவதும் நடைபெறுகின்ற இந்த சுழலில் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் மேக வெடிப்பு நிகழ்வு நடந்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துருக்கிறார்.
சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கிட்டத்தட்ட 13 செ.மீ. மழை மதுரை நகர் பகுதியில் பெய்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக மதுரை தல்லாகுளம் பகுதியில் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு 12 செ.மீ.அளவில் இந்த மழை பெய்து இருக்கிறது. அதுமட்டும் அல்ல மதுரை சுற்றி இருக்கக்கூடிய மற்ற பகுதியில் குறிப்பாக மதுரை அருகில் இருக்கக்கூடிய புளியம்பட்டி பகுதியில் 8 செ.மீ. வாடிப்பட்டி பகுதியில் 6 செ.மீ. என மதுரை மாவட்ட சுற்று பகுதியில் இருக்கக்கூடிய இடங்களிலும் இந்த கனமழை பெய்து இருக்கிறது.
ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த கனமழை நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர்கள் முழுதாக பெருக்கெடுத்து சாலை முழுதுமாக தேங்கியிருந்தது. அங்கு இருக்கக்கூடிய வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையான சிரமத்துக்குள்ளார்கள்.