தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இமாச்சலில் மீண்டும் மேகவெடிப்பு: பைக், கார்கள் அடித்துச்செல்லப்பட்டன; வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் நேற்று அதிகாலை பல இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கனமழையில் ஏராளமான வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஜூன் 20 அன்று மாநிலத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து பல முறை மேகவெடிப்புகள் ஏற்பட்டு பேரிடர் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 386 பேர் இறந்துள்ளனர். இதுவரை இமாச்சல் முழுவதும் ரூ.4,465 கோடி இழப்பை சந்தித்துள்ளது. சமீபத்தில் இமாச்சல் சேதத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, ரூ.1500 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார்.

Advertisement

இந்த சூழலில் நேற்று அதிகாலையும் இமாச்சலில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிலாஸ்பூர் மாவட்டத்தில் நம்ஹோல் பகுதியில் உள்ள குத்ரஹான் கிராமத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் அந்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல வாகனங்கள் இடிபாடுகளில் புதைந்தன. இருப்பினும் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை. சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர்.

போக்குவரத்தை சீக்கிரம் மீட்டெடுக்க பொதுப்பணித் துறை இடிபாடுகளை அகற்றத் தொடங்கியுள்ளது. சம்பா மாவட்டத்தில் உள்ள பட்டியாத் சட்டமன்றத் தொகுதியின் மாமல் மற்றும் கம்லாரி கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் மற்றும் குப்பைகள் புகுந்தன. தேசிய நெடுஞ்சாலை-3 இன் அட்டாரி-லே பகுதி, ஆட்டோ-சைஞ்ச் பகுதி, அமிர்தசரஸ்-போட்டா பகுதி உட்பட மொத்தம் 577 சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. இதனால் இமாச்சலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement