ஆய்வுக்கு அஞ்சி மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் திறப்பு
Advertisement
விருதுநகர்: சிவகாசி, வெம்பக்கோட்டையில் ஆய்வுக்கு அஞ்சி மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் 9 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வுசெய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் 14ம் தேதி உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பாயம் உத்தரவை அடுத்து பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 15 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு தொடங்கியது. ஆய்வுக்கு அஞ்சி விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை மூட பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டிருந்தது. பசுமை தீர்ப்பாயம் உத்தரவை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் திறப்பு
Advertisement