தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒருநாள் விடுப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு எடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது : ஊராட்சிகளில் வீடு தோறும் குப்பைகளை சேகரம் செய்வதற்காக வெளிநிரவல் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலமாக தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
Advertisement
தூய்மை காவலர்களுக்கு விடுமுறை மற்றும் விடுப்பு குறித்து கோரிக்கை வரப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தூய்மை காவலர்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு துய்க்கலாம். இதற்கு மேல் கூடுதலாக விடுப்பு துய்க்கப்படின் அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.160 பிடித்தம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement