தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி செம்மொழி நாள் விழா கொண்டாடப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

Advertisement

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சு துறை மானிய கோரி மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

* ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் நாள் தாய்மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும்.

* ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி செம்மொழிநாள் விழாவாக கொண்டாடப்படும். பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரை, பேச்சுப்போட்டி, மாவட்ட மாநில அளவில் நடத்தி பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்காக ₹1.88 கோடி ஒதுக்கப்படும்.

* தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். நூலுரிமை தொகைக்கென ₹91.35 லட்சம் வழங்கப்படும்.

* ஜனவரி 25ம் நாளை தமிழ்மொழி தியாகிகள் நாள் எனப் பின்பற்றி, புகழ் வணக்கம் செய்திட ₹2 லட்சம் வழங்கப்படும்.

* முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்பட்டு, ₹11 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

* வீறுகவியரசர் முடியரசன் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருச் சிலை நிறுவிட ₹50 லட்சம் வழங்கப்படும்.

* சண்டிகர் தமிழ் மன்ற கட்டிட விரிவாக்க பணிக்கு ₹50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

* சென்னை அரசு மைய அச்சகத்திற்கு புதிய இயந்திரம் ஒன்று ₹9 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டு உட்கட்டமைப்பு மற்றும் மின் பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* திருச்சி அரசு கிளை அச்சகத்திற்கு நிரலாக்க வெட்டும் இயந்திரம் ஒன்று ₹85 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.

* சென்னை அரசு மைய அச்சகம், அரசு கிளை அச்சகம் மதுரை, சேலம் மற்றும் புதுக்கோட்டை அலகுகளில் உள்ள கணினி முன் அச்சுப் பிரிவிற்கு தேவைப்படும் கணினிகள், பிரிண்டர்கள் ₹37.33 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.

Advertisement

Related News