சிஐடியு மாநில தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு: 41 புதிய நிர்வாகிகள் நியமனம்
கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சிஐடியு 16-வது மாநில மாநாடு கடந்த 6ம் தொடங்கியது. 4 நாட்களாக நடைபெற்ற இந்த மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து நேற்று பிரதிநிதிகள் விவாதம் நிறைவு பெற்று, தகுதி ஆய்வு குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் 41 பேர் கொண்ட சிஐடியு புதிய மாநில நிர்வாகிகள் குழு தேர்வு செய்யப்பட்டது.
இதன்படி சிஐடியு மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன், பொதுச்செயலாளராக எஸ்.கண்ணன், பொருளாளராக எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாநிலத் தலைவராக இருந்து வந்த அ.சவுந்திரராசன் மாநிலத் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். குமார், திருச்செல்வன், ஆறுமுகநாயினர், முத்துக்குமார் ஆகியோர் உதவி பொதுச்செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல 17 மாநில துணைத் தலைவர்களும், 17 மாநில செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.