சிட்ரான் பசால்ட் எக்ஸ்
சிட்ரான் நிறுவனம், பசால்ட் எக்ஸ் வேரியண்டை இந்தியச் சந்தையில் அடுத்த மாதம் 5ம் தேதி அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை வாங்குவதற்கு ரூ. 11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். சிட்ரான் சி3எக்ஸ் வேரியண்டில் சில மேம்பட்ட அம்சங்களுடன் பசால்ட் எக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனத் தரப்பில் கூறப்பட்டள்ளது.
10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, 7 அங்குல டிஎப்ட டிஜிட்டல் டிஸ்பிளே, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா உள்பட பிரீமியம் வேரியண்ட் அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கும் எனவும், 108 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.