சிட்ரான் பசால்ட் எக்ஸ்
சிட்ரான் நிறுவனம், பசால்ட் எக்ஸ் என்ற காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 1.2 லிட்டர் கொண்ட கூபே எஸ்யுவி வேரியண்டுக்கு அடுத்த டாப் வேரியண்டாக இது சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. பசால்ட் எக்ஸ்-ல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க்ைகயும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க்யூ கன்வர்டர் ஆட்டோமேட்டிக் தேர்வுகளில் கிடைக்கும். சிட்ரான் சி3 எக்ஸ்-ல் உள்ளது போன்று டூயல் டோன் பிளாக் கேபின் உள்ளது.
மேம்பட்ட அம்சங்களாக இதில் புஷ் பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் என்ட்ரில குரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் போன் மிரரிங், வென்டிலேட் உடன் கூடிய முன்புற சீட்கள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர ஸ்டாண்டர்டு அம்சமாக 6 ஏர்பேக்குகள் உள்ளது. பசால்ட் 1.2 என்ஏ மேனுவல் யூ துவக்க வேரியண்ட். இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.7.95 லட்சம். டாப் வேரியண்டான பசால்ட் எக்ஸ் 1.2 டர்போ ஆட்டோமேட்டிக் மேக்ஸ் சுமார் ரூ.12.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.