நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : அரசு தரப்பு
05:37 PM Mar 05, 2025 IST
Share
மதுரை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த்துறை செயலாளர் அமுதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.