திரையரங்குகளில் நியாயமான வகையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்
டெல்லி: திரையரங்குகளில் நியாயமான வகையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நியாயமான விலையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்காவிட்டால், மக்கள் வருகை குறைந்து தியேட்டர்கள் காலியாகிவிடும். மல்டி ப்ளக்ஸ்களில் டிக்கெட், உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களின் விலை குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் ரூ.100க்கு தண்ணீர் பாட்டில், ரூ.700க்கு காபி விற்பனை செய்கிறார்கள் என உச்ச நீதிமன்றம் காட்டம் தெரிவித்துள்ளது.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement