சினிமாவில் 50 ஆண்டுகள் ரஜினிக்கு மோடி வாழ்த்து
சென்னை: திரையுலகில் 50வது ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடிவாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘சினிமா உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்துக்கு வாழ்த்துகள். அவரது பயணம் ஒரு சிறப்புமிக்க அனுபவம். தலைமுறை தாண்டி அவரது மாறுபட்ட வேடங்கள் மக்கள் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றிகளை பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.