சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் வேங்கையாய் மாறிய பேடன் வாங்கை வீழ்த்தி அபாரம்: 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
சின்சினாட்டி: அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை பேடன் ஸ்டியர்ன்ஸ் அபார வெற்றி பெற்றார். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில், அமெரிக்க வீராங்கனை பேடன் ஸ்டியர்ன்ஸ் (23), சீன வீராங்கனை வாங் யஃபான் (31) மோதினர். இப்போட்டியில் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய பேடன், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.