சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சபலென்கா, அல்காரஸ் கால் இறுதிக்கு தகுதி
சின்சினாட்டி: அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 4வது சுற்று போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா 6-1, 7-5 என்ற செட் கணக்கில், ஸ்பெயினின் ஜெசிகா பௌசாஸ் மனீரோவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-7, 6-4, 6-2 என அமெரிக்காவின் மேடிசன் கீசையும், போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 6-3 என ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 6-1, 6-4 என இத்தாலியின் லூகா நார்டியை வென்று கால் இறுதிக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ் 6-2, 6-3 என அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ கோமேசானாவையும், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 6-4, 6-3 என பிரான்சின் பெஞ்சமின் போன்சியையும், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-4, 7-6 என பிரான்சின் அட்ரியன் மன்னாரினோவையும் வீழ்த்தினர். அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-3, 5-7, 3-6 என பிரான்சின் டெரன்ஸ் அட்மேனிடம் தோல்வி அடைந்தார்.