குரோம்பேட்டையில் ரூ.110 கோடியில் கட்டப்படும் மாவட்ட மருத்துவமனையை விரைவில் திறக்க ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு தயார் நிலையில் இருக்கின்ற பல் மருத்துவமனை எப்போது திறக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் ரூ.1,018 கோடி செலவில் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் ரூ.110 கோடி செலவில் ஒரு பிரமாண்டமான மருத்துவமனை கட்டப்பட்டு, பணிகள் இறுதி நிலையில் இருக்கிறது. மிகவிரைவில் மருத்துவ உபகரணங்களும், மருத்துவப் பணியாளர்களும் அதில் அமைக்கப்பட்டதற்கு பிறகு முதல்வர் வாயிலாக அந்த மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது,’’ என்றார்.