கிறிஸ்துமஸ், பொங்கல் கூட்ட நெரிசல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: கிறிஸ்துமஸ், பொங்கல் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ரயில் எண். 20681/20682 தாம்பரம் -செங்கோட்டை -தாம்பரம் சிலம்பு அதிவிரைவு ரயிலில் ஒரு ஏசி டூ டயர் பெட்டி, இரண்டு ஏசி த்ரீ டயர் பெட்டிகள், மூன்று ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு பொது2ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 1ம் தேதி முதல் 2026 ஏப்ரல் 29ம் தேதி வரையும், செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 2ம் தேதி முதல் 2026 ஏப்ரல் 30ம் தேதி வரையும் இணைக்கப்படும்.
ரயில் எண். 22657/22658 தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் விரைவு ரயிலில் ஒரு ஏசி டூ டயர் பெட்டி, 2 ஏசி த்ரீ டயர் பெட்டிகள், 3 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு பொது 2ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 2ம் தேதி முதல் 2026 ஏப்ரல் 29ம் தேதி வரையும், நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 3ம் தேதி முதல் 2026 ஏப்ரல் 30ம் தேதி வரையும் இணைக்கப்படுகிறது. பெட்டிகள் இணைக்கப்பட்ட பிறகு, இந்த ரயிலின் திருத்தப்பட்ட பெட்டி அமைப்பு 1 ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி டூ டயர் பெட்டி, 2 ஏசி டூ டயர் பெட்டிகள், 4 ஏசி த்ரீ டயர் பெட்டிகள், 11 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4 பொது 2ம் வகுப்பு பெட்டிகள், மற்றும் 2 லக்கேஜ் பிரேக் வேன் கம் 2ம் வகுப்பு பெட்டிகள் (மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற முறையில் இருக்கும்.
அதேபோல் ரயில் எண். 12695/12696 சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல்- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயிலில் ஒரு ஏசி டூ டயர் பெட்டி இணைக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 3ம் தேதி முதல் 2026 ஏப்ரல் 29ம் தேதி வரையும், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 4ம் தேதி முதல் 2026 ஏப்ரல் 30ம் தேதி வரையும் இணைக்கப்படுகிறது. ரயில் எண். 22639/22640 சென்னை சென்ட்ரல் -ஆலப்புழா -சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயிலில் ஒரு ஏசி டூ டயர் பெட்டி இணைக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 1ம் தேதி முதல் 2026 ஏப்ரல் 27ம் தேதி வரையும், ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரயிலில் நவ. 2ம் தேதி முதல் 2026 ஏப். 28ம் தேதி வரையும் இணைக்கப்படும்.
இந்த ரயிலின் திருத்தப்பட்ட பெட்டி அமைப்பு ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி டூ டயர் பெட்டி, 3 ஏசி டூ டயர் பெட்டிகள், 3 ஏசி த்ரீ டயர் பெட்டிகள், 10 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு பெட்டி (மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றது) மற்றும் 1 லக்கேஜ் கம் பிரேக் வேன் ஆகிய முறையில் இருக்கும்.
ரயில் எண். 16618/16617 கோயம்புத்தூர் -ராமேஸ்வரம் -கோயம்புத்தூர் விரைவு ரயிலில் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது. கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 4ம் தேதி முதல் 2026 ஏப்ரல் 28ம் தேதி வரையும், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 5ம் தேதி முதல் 2026 ஏப்ரல் 29ம் தேதி வரையும் இணைக்கப்பட உள்ளது. கூடுதல் பெட்டி இணைக்கப்பட்ட பிறகு, இந்த ரயிலின் திருத்தப்பட்ட பெட்டி அமைப்பு 1 ஏசி டூ டயர் பெட்டி, 6 ஏசி த்ரீ டயர் பெட்டிகள், 7 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4 பொது 2ம் வகுப்பு பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு பெட்டி (மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றது) மற்றும் 1 லக்கேஜ் கம் பிரேக் வேன் ஆகிய முறையில் இருக்கும்.