தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத நல்லிணத்துக்கு எடுத்துகாட்டாக கத்தோலிக்க ​கிறிஸ்தவர்கள் இல்லாத ஊரில் தேவாலயத் திருவிழாவை முன்னின்று நடத்திய இந்துக்கள்

நெல்லை: வள்ளியூர் அருகே மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கத்தோலிக்க ​கிறிஸ்தவர்கள் இல்லாத ஊரில் 103 ஆண்டுகள் பழமையான தேவாலயத் திருவிழாவை முன்னின்று 10 நாட்கள் பொதுமக்கள் நடத்தினர். ​புனித சவேரியார் சப்பரபவனியில் உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி இந்துக்கள் வழிபாடு செய்தனர். ​நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை ஊரில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களே வசிக்காத கிராமத்தில் பழமையான தேவாலயத் திருவிழாவை இந்து மக்களே முன்னின்று மதங்களைக் கடந்து கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

​நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த வடலிவிளை கிராமத்தில், 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் ஒரு காலத்தில் மக்களே நடத்தி வருகின்றனர். அதன்படி, கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆண்டுத் திருவிழாவில், தினமும் ஜெபமாலை மற்றும் திருப்பலி நடைபெற்று வந்தது. ​விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாள் திருவிழா மதியம் நடைபெற்ற சவேரியார் சப்பரபவனியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களும், ஊர் மக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

​குறிப்பாக, அந்த ஊரில் வசிக்கும் இந்து மக்கள், தங்கள் வேண்டுதல்களுக்காக உப்பு, மிளகு மற்றும் ரோஜா மலர் மாலைகளைத் தட்டில் வைத்துப் புனித சவேரியாரை பக்தியுடன் வழிபட்டனர். குறிப்பாக அங்குள்ள அம்மன் கோயில் அய்யாவழி கோயில் உள்ளிட்ட இந்து கோயில்களில் முன்பு புனித சவேரியாரின் சப்படங்கள் நிறுத்தப்பட்டு இந்து மக்கள் மாலை அணிவித்து வழிபட்டனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருமே இல்லாத நிலையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அந்த கிராம இந்துக்கள் முன்னின்று நடத்திய இந்த விழா சமூக நல்லிணக்கத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சமய நல்லிணக்கமாக அமைந்துள்ளது.

Advertisement