சிட்லபாக்கம் ஏரியில் பாதுகாப்பு குறைபாடு: தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை
சென்னை: சென்னை சிட்லபாக்கம் ஏரியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி உள்ள பொதுமக்கள் ஏரியை சுற்றிலும் தடுப்பு வேலியை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: சென்னை அடுத்து சிட்லபாக்கம் ஏரி சுமார் 85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது 53 ஏக்கராக சுருங்கியுள்ளது. அண்மையில் இந்த ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதைத்தொடர்ந்து ஏகவல்லி என்ற மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஏரியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதே இதுபோன்ற விபத்திற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. தொடர்ந்து சிட்லபாக்கம் ஏரியில் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஏரி பகுதியில் காவலரை பணி அமர்த்தவும், சிசிடிவி கேமரா பொருத்தி ஆக்கிரமிப்பு பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கவும் தாம்பரம் மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிட்லபாக்கம் ஏரியில் இனி உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.