தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சின்னர் புதிய சாதனை: முதல் இத்தாலி வீரர் என்ற சிறப்பை பெற்றார்

Advertisement

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடரில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் நேற்றிரவு நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் 23 வயதான ஜானிக் சின்னர், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் 22 வயது அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்புடன் தொடங்கிய இதில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 3 செட்டையும் 6-4, 6-4, 6-4 என கைப்பற்றி ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ.35 கோடி பரிசாக வழங்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சிறப்பை அவர் படைத்தார். கடந்த மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பைனலில் அல்காரசிடம் அடைந்த தோல்விக்கு சின்னர் நேற்று பழிதீர்த்துக்கொண்டார்.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருந்த சின்னருக்கு இது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். வெற்றிக்கு பின் சின்னர் கூறுகையில், ``விம்பிள்டனை வெல்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம். இது உண்மையில் எளிதாக இருந்ததில்லை என்பதால் நான் மிகவும் பெருமைப்படும் பகுதி இது’’ என்றார். ரன்னரான அல்காரசுக்கு ரூ.17.5 கோடி பரிசுத்தொகை கிடைத்தது.

இகா முன்னேற்றம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக், தரவரிசையில், 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். பெலாரசின் அரினா சபலென்கா முதல் இடத்திலும், அமெரிக்காவின் கோகோ காப் 2வது இடத்திலும் உள்ளனர். விம்பிள்டன் ரன்னரான அமெரிக்காவின் அமண்டா 5 இடம் முன்னேறி 7வது இடத்தில் உள்ளார்.

Advertisement

Related News