புதர்மண்டி கிடக்கும் சின்னம்பேடு பெரியஏரி கால்வாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
இந்நிலையில் ஏரி கால்வாய் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக புதர்மண்டி தடமே தெரியாமல் மறைந்துவிட்டது, மேலும் கால்வாய் ஓரங்களில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ராள்ளபாடி, பனையஞ்சேரி பகுதிகளில் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே, கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், ”பெரியபாளையம் - பாளேஸ்வரம் பகுதியில் இருந்து சின்னம்பேடு பெரிய ஏரிக்கு செல்லும் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால் பெரிதும் பயன்பெறுவோம். தற்போது ஏரி கால்வாய் புதர் மண்டி தூர்ந்துவிட்டது. கடந்த 2 வருடத்திற்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிக்கு செல்லும் கால்வாயை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைத்தனர். ஆனாலும் புதர்மண்டி காணப்படுகிறது. எனவே, புதர்மண்டி கிடக்கும் சின்னம்பேடு பெரிய ஏரி கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றி தந்தால் பயனாக இருக்கும்” என்றனர்.