நாளை இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை
10:44 AM Aug 17, 2025 IST
2 நாள் சுற்றுப் பயணமாக நாளை இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். மீண்டும் எல்லை வழி வர்த்தகம், அமெரிக்காவின் வரிவிதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.