சீன அமைச்சர் நாளை இந்தியா வருகை
புதுடெல்லி: ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆண்டு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அழைப்பின்பேரில் சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தருகிறார். நாளை டெல்லி வரும் வாங் யீ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்திக்கிறார். எல்லைப்பிரச்னையில் சிறப்பு பிரதிநிதிகளின் 24வது சுற்று பேச்சுவார்த்தையை அஜித் தோவலுடன் அவர் நடத்துவார்.