அமெரிக்கா 100% வரி விதித்தால் கடும் நடவடிக்கை: சீனா எச்சரிக்கை
பீஜிங்: அரியவகை தாதுக்கள்,லிதியம் பேட்டரிகளை கொண்டு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா மீதான இறக்குமதி வரி கூடுதலாக 100 சதவீதம் விதிக்கப்படும். இது வரும் நவம்பர்1 முதல் அமலுக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இது குறித்து சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அமெரிக்காவின் நடவடிக்கை சீன நலன்களை பாதிக்கிறது.
ஒவ்வொரு முறையும் வரியைக் காட்டி பயமுறுத்தி சீனாவை அணுகுவது சரியானது அல்ல. தங்களுக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்ற நிலையை அமெரிக்கா பின்பற்றுகிறது. அதிக வரிகள் விதிக்கப்படும் என்று வேண்டுமென்றே அச்சுறுத்துவது சீனாவுடன் இணைந்து செயல்பட சரியான வழி அல்ல. தவறான பாதையில் செல்ல அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், சீனா அதன் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.