தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஷாங்காய் மாநாட்டில் அணிதிரளும் உலகத் தலைவர்கள்: அமெரிக்காவை தனிமைப்படுத்த சீனாவில் வியூகம்

* இந்தியா - சீனா - ரஷ்யா உறவில் புதிய திருப்புமுனை உலகின் புதிய அதிகார மையமாகும் ‘குளோபல் சவுத்’

Advertisement

டெல்லி: அமெரிக்காவின் வர்த்தகப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, சீனா தலைமையில் கூடும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், புதிய உலக அதிகார மையத்தை உருவாக்கும் முயற்சியாக ‘குளோபல் சவுத்’ எனப்படும் தெற்கு உலக நாடுகளின் சந்திப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு இந்திய - சீன எல்லையில் ராணவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பதற்றம் நிலவி வந்தது. இருதரப்பு உறவுகள் முறிந்த நிலையில், ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்தன. இதேபோல், உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முயன்று வந்தன. கடந்த ஆண்டு ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், மேற்கத்திய தலைவர்கள் ரஷ்ய அதிபர் புதினைப் புறக்கணித்தபோதும், பிரதமர் மோடி அவருடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தச் சூழலில், இந்தியா, சீனா, ரஷ்யா இடையே முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா விரும்புவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அரசியல் பின்னணியில், சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த வாரம் 20க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களை சீனாவின் தியான்ஜின் நகரில் ஒன்றுதிரட்டுகிறார். வரும் 31ம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யுகத்தில் ‘குளோபல் சவுத்’ எனப்படும் தெற்கு உலக நாடுகளின் ஒற்றுமையைக் காட்டும் சக்திவாய்ந்த முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதின், மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். குறிப்பாக, 7 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது, இருதரப்பு உறவில் பதற்றம் தணிந்து வருவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ‘தி சைனா-குளோபல் சவுத் ப்ராஜெக்ட்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் எரிக் ஓலாண்டர் கூறுகையில், ‘அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக புதிய சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைப்பு எப்படி இருக்கும் என்பதை உலகுக்குக் காட்டவும், சீனா, ஈரான், ரஷ்யா மற்றும் தற்போது இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதை நிரூபிக்கவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்வார்’ என்கிறார். கடந்த 2001ல் ஆறு நாடுகளுடன் தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, தற்போது 10 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 16 பார்வையாளர் நாடுகளுடன் விரிவடைந்து, பொருளாதாரம் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு வரை தனது எல்லையை விஸ்தரித்துள்ளது. இருப்பினும், இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களும் உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடைமுறைச் செயல்பாடுகள் என்ன என்பதில் தெளிவில்லை.

உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் தளமாக மட்டுமே வளர்ந்துள்ளது, ஆனால் பாதுகாப்பு சார்ந்த முக்கிய பிரச்னைகளில் இந்த அமைப்பின் செயல்திறன் கேள்வியாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் போன்ற பூசல்களும் நீடிக்கின்றன. சமீபத்தில் காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து இந்தியா எழுப்பிய எதிர்ப்பால், ஷாங்காய் ஒத்துழைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. அதேபோல், ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலைக் கண்டிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு தீர்மானத்தில் இணையவும் இந்தியா மறுத்துவிட்டது. இந்த உள்முரண்பாடுகள் இருந்தபோதிலும், அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிகள் இந்தியாவுக்குக் கொடுத்துள்ள அழுத்தம், சீனாவுடன் சமரசம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

எனவே, மாநாட்டின் முக்கிய திருப்பமாக ஜி ஜின்பிங் - மோடி சந்திப்பில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, வர்த்தகம் மற்றும் விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, பருவநிலை மாற்றம் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பது போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு முடிந்ததும் பிரதமர் மோடி நாடு திரும்புவார் என்றும், ஆனால் ரஷ்ய அதிபர் புதின், இரண்டாம் உலகப் போர் ராணுவ அணிவகுப்பிற்காக சீனாவில் தொடர்ந்து தங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அரங்கில் சூடுபிடிக்கும் அதிகாரப் போட்டி

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா வந்த பிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த சூழலில், இந்தியப் பொருட்களுக்கு எதிராக ஏற்கனவே இருக்கும் வரியுடன் அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி இன்று அமலுக்கு வந்தது. ரஷ்யாவுடனான இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் காரணம் காட்டி, அதிபர் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதன் காரணமாக, இந்த வாரம் நடைபெறவிருந்த இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பால், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் சீனா, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளை விட இந்தியா மிகவும் அதிகமாக வரி விதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது.

இது அமெரிக்காவுக்கான இந்தியாவின் 86.5 பில்லியன் டாலர் வருடாந்திர ஏற்றுமதியை கடுமையாகப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மத்தியில், பிரதமர் மோடி தனது ராஜதந்திர பயணங்களைத் தீவிரப்படுத்தியுள்ளார். வரும் நாளை மறுநாள் (ஆக. 29, 30) அவர் ஜப்பானுக்குச் செல்கிறார். பிரதமரான பின்னர் அவர் எட்டாவது முறையாக ஜப்பான் பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்திக்கும் பிரதமர் மோடி, இருதரப்பு கூட்டாண்மை, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இந்தப் பயணம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் பயணத்தை முடித்த கையோடு, 7 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, பிரதமர் மோடி வரும் 31ம் தேதி சீனாவுக்குப் பயணிக்கிறார்.

அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்கும் அவர், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்காவின் வர்த்தகப் போரால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாடு ‘குளோபல் சவுத்’ எனப்படும் தெற்கு உலக நாடுகளின் வலிமையைக் காட்டும் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News