சீனாவைச் சேர்ந்த 6 லட்சம் மாணவர்கள் அமெரிக்க பல்கலை.களில் சேர்ந்து படிக்க அனுமதி அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த 6 லட்சம் மாணவர்கள் அமெரிக்க பல்கலை.களில் சேர்ந்து படிக்க அனுமதி என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீன மாணவர்களின் விசா அனுமதி ரத்து என்று ஏற்கனவே அறிவித்த டிரம்ப் தன் நிலையை மாற்றிக் கொண்டார். அரிய உலோக காந்தங்களை அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்ய வலியுறுத்தியுள்ளார். அரிய உலோக காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிடில் 200% வரி விதிப்போம் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். உயர்திறன் ஏ.ஐ. சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய விதித்த தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது. டிரம்பின் அறிவிப்புகளை ஆதரித்தவர்கள் சீன மாணவர்களை அனுமதிக்கும் முடிவை விமர்சித்துள்ளனர்
Advertisement
Advertisement