சீனா ஓபன் டென்னிஸ் சீறி அடங்கிய டிமினார் சின்னர் இறுதிக்கு தகுதி
பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில், இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினாரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். சீனாவின் பெய்ஜிங் நகரில் சீனா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
Advertisement
நேற்று நடந்த அரை இறுதிப் போட்டி ஒன்றில் உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றிய சின்னர், 2வது செட்டை 4-6 என்ற புள்ளிக் கணக்கில் பறிகொடுத்தார். இருப்பினும், 3வது செட்டில் சுதாரித்து ஆக்ரோஷமாக ஆடிய அவர் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தி போட்டியில் வென்றார். இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு அவர் முன்னேறினார்.
Advertisement