சீனாவின் யுனான் மாகாணத்தில் தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
சீனா: சீனாவின் யுனான் மாகாணத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். லோயாங் ரயில் நிலையத்தில் தண்டவாள வளைவில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதி விபத்துகுள்ளானது. ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்து இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று தென்மேற்கு சீனாவில் ரயில் ஒன்று ரயில்வே தொழிலாளர்கள் மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். குன்மிங் நகரில் உள்ள லுயோயாங் டவுன் ரயில் நிலையத்திற்குள் ஒரு வளைந்த பகுதியில் தண்டவாளத்திற்குள் நுழைந்த தொழிலாளர்கள் மீது நில அதிர்வு உபகரணங்களை சோதனை செய்து கொண்டிருந்த போது ரயில் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
"குன்மிங் லுயோயாங் டவுன் நிலையத்திற்குள் ஒரு வளைவு வழியாக ரயில் வழக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளப் பகுதிக்குள் நுழைந்த கட்டுமானத் தொழிலாளர்கள் மீது மோதியது. விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இன்று நண்பகலில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தெளிவற்ற விதிமுறைகள் மற்றும் தளர்வான பாதுகாப்புத் தரங்கள் காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துக்கள் மிகவும் பொதுவானவை.