சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக உடன்பாடு: சீன அதிபர் கருத்து
சீனா: சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக உடன்பாடு தொடர்பான அடிப்படை அம்சங்களில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான பேச்சுக்கு பிறகு சீன அதிபர் ஸி ஜின்பிங் கருத்து தெரிவித்துள்ளார். டிரம்பை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி; தொலைபேசியில் அவருடன் 3 முறை பேசினேன். தங்கள் தலைமையின்கீழ் சீன - அமெரிக்க உறவு ஸ்திரமாக உள்ளதாகவும் ஸி ஜின்பிங் கூறியுள்ளார். இரு நாட்டு பிரதிநிதிகளும் மலேசியாவில் நடத்திய பேச்சில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்தே ஜின்பிங் டிரம்பை சந்தித்தார் . அமெரிக்காவை மீண்டும் மாபெரும் நாடாக உயர்த்தும் டிரம்ப் லட்சியத்துக்கு உதவுவதாகவே சீன வளர்ச்சி உள்ளதாக ஜின்பிங் தெரிவித்தார்.
Advertisement
Advertisement