சீனாவில் நடைபெற்ற பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு: 2ம் உலகப்போரை நினைவு கூறும் வகையில் சீனா ஏற்பாடு
பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்ற பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் பங்கேற்றனர். 2ம் உலகப்போர் முடிவை நினைவு கூறும் வகையில் பெய்ஜிங்கின் தியனன் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்புக்கு அதிபர் ஜிப்சிங் தலைமை தாங்கினார். நிகழ்வில் பேசிய அவர், சீனாவின் வளர்ச்சியை எந்த நாடும் தடுத்துவிட முடியாது என்றார். இதையடுத்து சீனாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஆய்வு செய்த சீன அதிபர், வாகனத்தில் பயணித்தப்படி ராணுவ மரியாதையை ஏற்று கொண்டார். சீனாவின் முப்படைகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் பேரணியில் மிடுக்குடன் அணிவகுத்து சென்றனர்.
சீனாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமான நவீன ஆயுதங்கள், கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், கவச வாகனங்கள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள், நவீன டிரோன்கள், நவீன பாதுகாப்பு அமைப்புகள், தகவல் தொடர்பு சாதனங்கள் இந்த பேரணியில் அணிவகுத்தன. முதன்முறையாக அணுசக்தி ஆதங்களையும் அணிவகுப்பில் சீனா காட்சிப்படுத்தி இருந்தது. சீனாவின் வெற்றி கொண்டாட்ட அணிவகுப்பில் சிறப்பு பார்வையாளர்களாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இந்தோனேசிய அதிபர் பிரபோவோவும் கலந்து கொண்டனர். தியனன் சதுக்கத்தில் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவ அணிவகுப்பினை கண்டு ரசித்தனர்.