தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிரம்மபுத்திரா நதியில் மிகப்பெரிய அணைக்கட்டும் சீனா: இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி!!

டெல்லி: பிரம்மபுத்திரா நதியில் மிகப்பெரிய அணைக்கட்டும் பணியை தொடங்கி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது சீனா. இந்த அணை கட்டப்பட்டால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு. நமது அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தில் யார்லங் சாங்போ நதியில் ரூ.14 லட்சம் கோடி மதிப்பில் பிரமாண்டமான அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. அருணாச்சலம் பிரதேசத்துக்கு அருகில் ஓடும் இந்த நதி இந்தியாவில் பிரம்மபுத்திரா என அழைக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை சீன பிரதமர் லீ கெச்சியாங் அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தற்போது அணைக்கட்டும்பணி சீனா தொடங்கியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் இந்தியா மட்டும் வங்க தேசத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இங்கு அணை கட்டுப்படுவது குறித்து கடந்த ஆண்டு இந்தியா, சீனாவிடம் கவலை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சீனா அணைக்கட்டுவது குறித்து எந்த கவலையும் வேண்டாம் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், திபெத்தில் சீனா அணைக்கட்டுவது குறித்து எந்த கவலையும் வேண்டாம். பிரம்மபுத்திரா ஒரு வலிமையான நதி, இந்த நதி ஒரே ஒரு நீர் ஆதாரத்தை மட்டுமே சார்ந்தது இல்லை. பிரம்மபுத்திராவின் நீரோட்டத்தை சீனா தொந்தரவு செய்தால், தண்ணீர் வரத்து குறையும்.

இதன் விளைவாக பல்லுயிர் பெருக்கம் குறையும். இங்கு பரமாண்டமான அணை கட்டப்படுவதை குறித்து சீனாவுடனும், நம் அண்டை நாடுகளுடனும் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கும் நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் உடனடியாக இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவை எடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் விருப்பமாக உள்ளது.

Related News