சீனாவை எங்களிடம் இருக்கு முக்கிய ஆயுதங்களால் அழிக்க முடியும்.. பகிரங்கமாக எச்சரித்த டிரம்ப்: இரு வல்லரசுகள் இடையே முற்றும் மோதல்!!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா மீது கடுமையான எச்சரிக்கையை முன்வைத்துள்ளார். தன்னிடம் இருக்கும் சில முக்கிய ஆயுதங்களை பயன்படுத்தினால் சீனாவை அழிக்கக்கூடும் என கூறிய டிரம்ப், சீனா மீது 200% வரி விதிப்பது தொடர்பாகவும் பேசி இருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், சீன அதிபர் சீ சின்பிங் உடன் சமீபத்தில் பேசியதாகவும், பெய்ஜிங்கிற்கு பயணம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். அநேகமாக இந்த ஆண்டு இறுதி அல்லது அதற்கு பிறகு விரைவில் சீனாவுக்கு செல்வேன். சீன அதிபர் இதற்கான அழைப்பை வழங்கியதாகவும் டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒருங்கிணைந்த உறவை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் டிரம்ப். இது குறித்து பேசிய டிரம்ப், நாங்கள் சீனாவுடன் சிறந்த உறவை கொண்டிருக்க போகிறோம். அவர்களிடம் சில ஆயுதங்கள் உள்ளன. எங்களிடமும் அதைவிட நம்ப முடியாத சில ஆயுதங்கள் உள்ளன. ஆனால், நான் அதை பயன்படுத்தி விளையாட விரும்பவில்லை. அதை பயன்படுத்தினால் சீனாவை அழித்துவிடும் என்று அவர் கூறினார். ஆக.12ம் தேதி அமெரிக்காவும், சீனாவும் தங்கள் வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க ஒப்பு கொண்டன.
கடந்த ஒரு வருடமாக நீடித்து வரும் சர்ச்சைகளை தீர்க்க பேச்சுவார்த்தையாளர்களுக்கு அதிகநேரம் வழங்குவதற்காக இந்த இடைநிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் இருந்து வெள்ளை மளிகை, சீன இறக்குமதிகள் மீதான வரிகளை மீண்டும் மீண்டும் உயர்த்தியுள்ளது. அதிகபட்ச வரி 145%ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து வரும் பெரும்பாலான பொருட்கள் தற்போது 30% வரியை எதிர்கொள்கின்றன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமெரிக்கா இறக்குமதிகளுக்கு 10% வரி விதித்து இருக்கிறது சீனா. சீனாவின் Rare x policy குறித்தும் டிரம்ப் பேசி இருக்கிறார்.
அதாவது சீனா, அமெரிக்காவிற்கு காந்தங்களை தொடந்து வழங்காவிட்டால் நாம் அவர்களிடம் 200% வரி வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சீனா ஏப்ரல் மாதத்தில் அறிய மண் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. டிரம்பின் கருத்துக்கள் சீனாவின் மீது தனது அழுத்தம் மற்றும் தட்டுப்பாடு என்று இரண்டை அணுகு முறையை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. ஒருபுறம் தொடர்ந்து கட்டணங்களை உயர்த்தி சீனா வர்த்தக நடைமுறைகளுக்கு சவால் விடுகிறது. மறுபுறம் அமெரிக்காவும், சீனாவும் சிறந்த உறவை பராமரிக்கும் என்ற தனது கருத்தை மீண்டும் கூறி சீனாவை முடக்கும் நடவடிக்கைகளை எடுக்க மாட்டேன் என்றும் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.