சில்லிபாயிண்ட்...
* ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டன் போட்டி சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றை பிரிவு 2வது சுற்று போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் 21-17, 13-21, 21-13 என்ற செட் கணக்கில் தைவான் வீரர் சி யு-ஜென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோதை நரோகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 2வது சுற்று போட்டியில் ஆடிய இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கிடாம்பி, தருண் மன்னெப்பள்ளி, எஸ்.பிரன்னாய் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.
* இத்தாலியில் உள்ள போலோக்னா நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடந்தது. இதில், ஆஸ்திரியாவுக்கு எதிரான இரண்டு ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் வெற்றி பெற்று, டேவிஸ் கோப்பையின் அரையிறுதியில் இத்தாலி அணி தகுதி பெற்றது. அரையிறுதியில் பெல்ஜியத்தை இத்தாலி எதிர்கொள்கிறது.
* இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் டி20 தொடரில் விளையாடுவார்கள். அடுத்தாண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
* வங்கதேசம் தலைநகர் டாக்காவில் நடந்த வரும் மகளிர் உலகக்கோப்பை கபடியில் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி, நேற்று ஜெர்மனியுடன் நடந்த ஆட்டத்தில் 63-22 என்ற புள்ளி கணக்கில் வென்றது.