தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சில்லிபாயிண்ட்...

* நடுவரை நீக்க முடியாது பிசிபி கோரிக்கை நிராகரிப்பு

Advertisement

லண்டன்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியின் துவக்கத்தில் டாஸ் போடும்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் பாக். கேப்டன் சல்மான் ஆகா கை குலுக்கவில்லை. போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் கைகுலுக்குவதை தவிர்க்கும்படி கூறியதாக, பாக். தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அவரை போட்டித் தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்றும், பாக். கிரிக்கெட் வாரியம் (பிசிபி), ஐசிசியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், பாக். கோரிக்கையை ஐசிசி நிர்வாகம் நேற்று நிராகரித்துள்ளது. இது தொடர்பாக முறையான விசாரணைக்கு பின், பாக் கோரிக்கையை ஏற்க முடியாது என்பதை பிசிபிக்கு ஐசிசி முறைப்படி தகவல் தெரிவித்துள்ளது.

* உலக மல்யுத்தம் மங்கோலிய வீராங்கனையிடம் வைஷ்ணவி தோல்வி

ஜாக்ரெப்: குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடந்து வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் நேற்று, 65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வைஷ்ணவி பாட்டீல், லாத்வியா வீராங்கனை எல்மா ஸெய்ட்லெரை, 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். இருப்பினும் மற்றொரு போட்டியில் மங்கோலியாவை சேர்ந்த உலகின் 5ம் நிலை வீராங்கனை எங்ஜின் டுவ்ஷிங்ஜர்கலிடம் 2-4 என்ற புள்ளிக் கணக்கில் அவர் தோல்வியை தழுவினார்.

* இந்திய அணி ஸ்பான்சர் அப்போலோ டயர்ஸ்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அணியும் ஜெர்சிக்கு புதிய ஸ்பான்சராக, அப்போலோ டயர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி (பிசிசிஐ) நேற்று தெரிவித்தார். இதையடுத்து, இனி வரும் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் அணியும் ஜெர்சிக்களில் அப்போலோ டயர்ஸ் நிறுவன லோகோ இடம்பெறும் என தெரிகிறது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்ததை தொடர்ந்து, இந்திய அணி ஜெர்சிக்கு ஸ்பான்சராக இருந்த டிரீம் 11 நிறுவனம், ஜெர்சி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அதனால், தற்போது, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள், டைட்டில் ஸ்பான்சர் இன்றி ஆடி வருகின்றனர்.

Advertisement