சில்லி பாய்ன்ட்...
* தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
வங்கதேசத்துக்கு எதிரான 2 டி20 போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. அடுத்த களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.
* ஆஸி. இளம் வீரர் பந்து தாக்கி மரணம்
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிளப்புக்காக விளையாடும் 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின், கடந்த செவ்வாய்கிழமை வலைபயிற்சியில் ஈடுபட்ட போது, கழுத்து பகுதியில் பந்து பலமாக பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
* கேகேஆர் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்
2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதனால் அணியின் பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து கொல்கத்தா அணி நிர்வாகம் நீக்கியது. இந்நிலையில், கொல்கத்தா அணியில் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயரை அந்த அணி நிர்வாகம் நியமித்து உள்ளது.
