குழந்தைகள் ரைம்ஸ் மூலம் யூ டியூபில் உலக அளவில் பிரபலமான நிறுவனம்: வர்த்தக சந்தையில் அறிமுகம்
தென்கொரியா: குழந்தைகள் ரைம்ஸ் மூலம் யூடியூப்பில் உலக அளவில் பிரபலமான நிறுவனம் வர்த்தக சந்தையில் அறிமுகமாக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென்கொரியாவை சார்ந்த பொழுது போக்கு நிறுவனமான பிங்க் ஃபாங் மூலம் 2016ம் ஆண்டு யூடியூப்பில் வெளியானது. குழந்தைகளை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அனிமேக்ஷன் கார்டூன்கள், எளிய பாடல் வரிகளால் பேபி ஷார்க் ரைம்ஸ் உலக அளவில் வைரலானது. மொழி வேறுபாடின்றி இன்றளவும் குழந்தைகள் இருக்கும் அனைத்து வீடுகளிலும் தவறாமல் பேபி ஷார்க் ஒளித்து கொண்டுள்ளது.
யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையையும் படைத்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 47 லட்சம் முறை பார்க்கப்படுவதாக கூறும் பிங்க் ஃபாங் நிறுவனம் இதுவரை 16.4 பில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக கூறுகிறது. குழந்தைகள் உலகத்தில் பிரபலமான பேபி ஷார்க் படைப்பாளர் நிறுவனமான பிங்க் ஃபாங் செவ்வாய்க்கிழமை பங்குசந்தையில் அறிமுகமாகி முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது 38 ஆயிரம் கொரிய வான்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பங்கின் விலை வர்த்தகம் தொடங்கிய பின்னர் 61 ஆயிரத்து 60 வான்களாக உயர்ந்தது.
நிறுவனத்தின் இலக்கு வரம்பு உச்சத்தில் 76 பில்லியன் வான் மட்டுமே திரட்டி இருந்தாலும் ஒரு பங்கின் விலை 38 ஆயிரம் வான் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மிகவும் பிரபலமானதாக இருந்ததால் விற்கப்படும் பங்குகளின் எண்ணிக்கையை விட 600 மடங்கு அதிகமாக வாங்க முதலீட்டாளர்கள் முன்வந்தனர். பிங்க் ஃபாங் நிறுவனத்தின் கடந்த ஆண்டு லாபம் 97.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் வர்த்தகத்திலும் பரந்த உலகளாவிய விரிவாக்கத்தில் ஈடுபடவும் தொடங்கி உள்ளது.