சிறுவர்களை பாதுகாக்க வேண்டும் பாலியல் சம்மத வயதை 18க்கு கீழ் குறைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
புதுடெல்லி: பாலியல் சம்மத வயதை 16ஆக குறைக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் ஒன்றிய அரசின் பதில் கூ நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: பாலியல் சுரண்டலில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் நோக்கில் நன்கு பரிசீலிக்கப்பட்டு பாலியல் சம்மதம் தெரிவிக்க 18 வயது தான் சரி என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
எனவே சம்மதத்திற்கான வயதை நீர்த்துப்போகச் செய்வது அல்லது இளம் பருவ காதல் என்ற போர்வையில் விதிவிலக்குகளை அறிமுகப்படுத்துவது சட்டப்பூர்வமாக நியாயமற்றது மட்டுமல்ல, ஆபத்தானது. எனவே தற்போதுள்ள சட்டப்பூர்வ சம்மதத்திற்கான வயதை கண்டிப்பாகவும் சீராகவும் அமல்படுத்த வேண்டும் ’ என்று தெரிவித்துள்ளது.