மயிலாப்பூரில் 15 வயது சிறுவனுக்கும் 9 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்த பெற்றோர்
04:56 PM Jul 17, 2024 IST
Share
சென்னை: சென்னை மயிலாப்பூரில் 15 வயது சிறுவனுக்கும் 9 வயது சிறுமிக்கும் பெற்றோரே ஜூலை 10ம் தேதி திருமணம் செய்து வைத்த நிகழ்வு அம்பலமாகியுள்ளது. குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திருமணமான இரு குழந்தைகளும் மீட்கப்பட்டு சிறார் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.