சென்னை : சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூலம் வீடியோ வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுமியின் வாக்குமூலம் வெளியான விவகாரம் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சைபர் க்ரைம் பிரிவு அதிகாரியை நியமிக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை தொடர்பான அறிக்கையை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்ய புதிய சிறப்பு புலனாய்வு குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.