துண்டு துண்டாக வெட்டி 6 வயது குழந்தை நரபலி?: அரியானாவை உலுக்கிய கொடூரம்
குருகிராம்: குருகிராம் அருகே சாலையோரம் குழந்தையின் தலை மற்றும் கால் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் அருகே குண்ட்லி-மானேசர்-பல்வல் (கே.எம்.பி) விரைவுச் சாலையோரம் உள்ள புதர் பகுதியில், விவசாயி ஒருவர் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் தலை மற்றும் ஒரு கால் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல் பாகங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். குழந்தையின் உடல், மற்றொரு கால் மற்றும் இரண்டு கைகளும் மாயமாகியிருந்தன. கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் அழுகிய நிலையில் இருந்ததால், குழந்தையின் பாலினத்தை உடனடியாக அறிய முடியவில்லை. மேலும், குழந்தை 6 முதல் 8 வயதுக்குள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குழந்தை வேறு எங்கோ கொலை செய்யப்பட்டு, கூர்மையான ஆயுதத்தால் உடல் துண்டிக்கப்பட்டு, அடையாளத்தை மறைப்பதற்காகப் பாகங்கள் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சுமார் நான்கு முதல் ஆறு நாட்களுக்கு முன்பு இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், குருகிராம், நூ மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் காணாமல் போன குழந்தைகளின் பதிவுகளைச் சரிபார்த்தும் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். இந்தக் கொடூர கொலைக்குப் பின்னணியில் நரபலி போன்ற மாந்திரீக நம்பிக்கைகள் இருக்கலாம் என்ற கோணத்திலும், அல்லது வனவிலங்குகள் உடலைச் சிதைத்திருக்கலாமா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையின் உடல், மற்றொரு கால் மற்றும் இரண்டு கைகளும் மாயமாகியிருந்தன. கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் அழுகிய நிலையில் இருந்ததால், குழந்தையின் பாலினத்தை உடனடியாக அறிய முடியவில்லை.